Monday 29 April 2013



நாம் எங்கே இருக்கிறோம்?


இப்போது ஒரு எளிய கேள்வி. நாம் எங்கே இருக்கிறோம்?

இந்த கேள்விக்கு அறிவியலின் விடையை அறிந்து, அசைபோட்டு பார்த்தீர்களேயானால் அதில் ஒரு ஞானம் அடங்கியிருப்பது உணரப்படும் (இதை பலரிடம் நேரடியாக நான் கேட்டதுண்டு. விடைகள் வெகு சில முறைகள் மட்டுமே துல்லியமாக வந்தன. பல நேரங்களில் அவை பரிதாபப்படும் வகையில் இருந்தன). முக்கியாமான விஷயம், பதிலை விரிவாக்கிக்கொண்டே போக வேண்டும். உதாரணம், இந்தியாவில் என்று பதில் வந்தால், இந்தியா எங்கே உள்ளது? என்று கேட்க வேண்டும். ஒரு முறை உங்களையே நாம் எங்கே இருக்கிறோம்? என்று கேட்டுக்கொண்டு, உங்களால் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்று பாருங்கள். விடை கீழே உள்ளது. ஒப்பிட்டு கொள்ளலாம்.
1. ஊர்
2. மாநிலம்
3. நாடு
4. கண்டம்
5. பூமி
நான் இந்த கேள்வியை சுமார் 100 தமிழக சாமான்யர்களிடம் கேட்டிருக்கிறேன். கிட்டத்தட்ட 50 பேர் இத்துடன் நின்றுவிட்டனர்.
6. சூரிய குடும்பம் (சூரிய குடும்பத்தில் பூமி உட்பட மொத்தம் 8 கிரகங்கள் உள்ளன. அவை சூரியன் எனும் நட்சத்திரத்தை சுற்றி வருகின்றன. பூமி மூன்றாவது கிரகம். http://upload.wikimedia.org/wikipedia/commons/a/a9/Planets2013.jpg
உபரி தகவல்: ஒளி/வெளிச்சம் என்பது ஒரு நொடியில் 3 லட்சம் கி.மீ வேகத்தில் பயணிக்கும். இருந்தும், அது சூரியனில் இருந்து பூமியை அடைய 500 நொடிகள் ஆகின்றது. நினைத்து பாருங்கள் பூமி - சூரியன் இடைவெளியை)
7. பால்வழி திரள் (இது சூரியன் உட்பட கிட்டத்தட்ட 400 பில்லியன் (1பில்லியன் என்பது 100 கோடி) நட்சத்திரங்களை கொண்ட ஒரு நட்சத்திர கூட்டம், சூரியன் இதன் மையத்தை சுற்றி வருகிறது.
உபரி தகவல்: ஒரு நொடியில் 3 லட்சம் கி.மீ வேகத்தில் பயணிக்கும் ஒளி, ஒரு வருடத்தில் சுமார் 10 ட்ரில்லியன் கி.மீ (1 ட்ரில்லியன் என்பது 100000 கோடி) பயணிக்கும். இது ஒரு ஒளி ஆண்டு ஆகும். பால்வழி திரளின் விட்டம் சுமார் 120000 ஒளி ஆண்டு) http://casswww.ucsd.edu/archive/public/tutorial/MW.html
8. லோக்கல் குரூப்
9. விர்கோ சூப்பர் கிளஸ்டர்
http://upload.wikimedia.org/wikipedia/commons/b/b6/Earth%27s_Location_in_the_Universe_%28JPEG%29.jpg
10. பேரண்டம்/ பிரபஞ்சம் (இதற்கு இன்னொரு அர்த்தம் 'அனைத்தும்'. இதில் நாம் வாழும் பால்வழி திரள் போன்று கிட்டத்தட்ட 200 பில்லியன் நட்சத்திர கூட்டங்கள் உள்ளன. இதன் எல்லை இன்னும் கண்டுபிக்கப்படவே இல்லை)
இதுதான் அறிவியல் சொல்லும் விடை. மெல்ல மீண்டும் அசைபோட்டு பாருங்கள்.
நாம் எங்கே இருக்கிறோம்? எல்லையில்லா பிரபஞ்சத்தின் எங்கோ ஒரு தொலைந்த மூலையில் நகர்ந்துகொண்டிருக்கும் சிறு பந்தின் மீது... ஹ்ம்ம்ம் அதில்தான் எத்தனை எத்தனை வாழ்க்கை!
Reference and further knowing: http://www.youtube.com/embed/17jymDn0W6U
http://www.britannica.com/EBchecked/media/159542/Scale-of-the-universe
1. ஊர்2. மாநிலம்3. நாடு4. கண்டம்5. பூமி

நான் இந்த கேள்வியை சுமார் 100 தமிழக சாமான்யர்களிடம் கேட்டிருக்கிறேன். கிட்டத்தட்ட 50 பேர் இத்துடன் நின்றுவிட்டனர்.

6. சூரிய குடும்பம் (சூரிய குடும்பத்தில் பூமி உட்பட மொத்தம் 8 கிரகங்கள் உள்ளன. அவை சூரியன் எனும் நட்சத்திரத்தை சுற்றி வருகின்றன. பூமி மூன்றாவது கிரகம். http://upload.wikimedia.org/wikipedia/commons/a/a9/Planets2013.jpg 

உபரி தகவல்: ஒளி/வெளிச்சம் என்பது ஒரு நொடியில் 3 லட்சம் கி.மீ வேகத்தில் பயணிக்கும். இருந்தும், அது சூரியனில் இருந்து பூமியை அடைய 500 நொடிகள் ஆகின்றது. நினைத்து பாருங்கள் பூமி - சூரியன் இடைவெளியை)

7. பால்வழி திரள் (இது சூரியன் உட்பட கிட்டத்தட்ட 400 பில்லியன் (1பில்லியன் என்பது 100 கோடி) நட்சத்திரங்களை கொண்ட ஒரு நட்சத்திர கூட்டம், சூரியன் இதன் மையத்தை சுற்றி வருகிறது.உபரி தகவல்: ஒரு நொடியில் 3 லட்சம் கி.மீ வேகத்தில் பயணிக்கும் ஒளி, ஒரு வருடத்தில் சுமார் 10 ட்ரில்லியன் கி.மீ (1 ட்ரில்லியன் என்பது 100000 கோடி) பயணிக்கும். இது ஒரு ஒளி ஆண்டு ஆகும். பால்வழி திரளின் விட்டம் சுமார் 120000 ஒளி ஆண்டு) http://casswww.ucsd.edu/archive/public/tutorial/MW.html

8. லோக்கல் குரூப்

9. விர்கோ சூப்பர் கிளஸ்டர் http://upload.wikimedia.org/wikipedia/commons/b/b6/Earth%27s_Location_in_the_Universe_%28JPEG%29.jpg 

10. பேரண்டம்/ பிரபஞ்சம் (இதற்கு இன்னொரு அர்த்தம் 'அனைத்தும்'. இதில் நாம் வாழும் பால்வழி திரள் போன்று கிட்டத்தட்ட 200 பில்லியன் நட்சத்திர கூட்டங்கள் உள்ளன. இதன் எல்லை இன்னும் கண்டுபிக்கப்படவே இல்லை)இதுதான் அறிவியல் சொல்லும் விடை. மெல்ல மீண்டும் அசைபோட்டு பாருங்கள்.நாம் எங்கே இருக்கிறோம்? எல்லையில்லா பிரபஞ்சத்தின் எங்கோ ஒரு தொலைந்த மூலையில் நகர்ந்துகொண்டிருக்கும் சிறு பந்தின் மீது... ஹ்ம்ம்ம் அதில்தான் எத்தனை எத்தனை வாழ்க்கை!Reference and further knowing: http://www.youtube.com/embed/17jymDn0W6Uhttp://www.britannica.com/EBchecked/media/159542/Scale-of-the-universe



நேனோ டெக்னாலஜி



நேனோ டெக்னாலஜியில் (Nano- technology) அப்படி என்ன தான் இருக்கிறது, என்ன தான் அதன் சிறப்பம்சம் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமில்லை தான், ஆனால் நம் குழந்தைகள்/ பேரன் பேத்திகள் எதிர்காலத்தில், ஒரு சந்தர்பத்தில், புரிந்து கொள்வார்கள், நம்ம அப்பா/ தாத்தா ஒரு டம்மி பீசு,, நேனோ டெக்னாலஜின்னா அவருக்கு என்னான்னு தெரியாது, அவர் போன தலைமுறைல வாழ்ந்துட்டு இருக்காரு சொன்னாலும் புரியாது,, (ஒரு செல்போனை உபயோகிக்க எங்க தாத்தா எவ்ளோ கஷ்டப்பட்டாருன்னு எனக்கு தான் தெரியும் )

பிகாஸ், எதிர்காலம் நேனோ மேட்டீரியல்சால் நிரம்பி இருக்கும்,,, இப்போ விஷயம் அதுவல்ல, நேனோ என்றால் என்ன ?? நேனோ மெட்டீரியல்ஸ் அப்படி என்ன ஆச்சர்யமிக்க ஒரு விஷயம் ?? என்ற கேள்விக்கு பதில்..
நீங்கள், கையில் ஒரு கத்திரி எடுத்து கொள்ளுங்கள் ஒரு 'மீட்டர்' நீளமுள்ள ஒரு நூலை எடுத்து கொள்ளுங்கள், இப்போது அந்த நூலை, நீங்கள் சிறு சிறு துண்டுகளாக வெட்ட போகிறீர்கள், எப்படி என்றால், 1000000000 சமமான துண்டுகளாக வெட்ட வேண்டும், வெட்டி போட்ட துண்டுகளில் ஒரு துண்டை மட்டும் எடுத்து கொள்ளுங்கள், அது தான் ஒரு 'நேனோ மீட்டர்' (Nano-meter = 10^(-9) m) என்ற அளவு,, இப்போது இவ்வுலகில் உள்ள எந்த பொருளையும் உங்கள் கையில் இருக்கும் அந்த நூலின் அளவிற்கு மாற்றி விட்டால் அது தான் நேனோ மெட்டீரியல்,
இப்போது நேனோ மெட்டீரியல்சின் ஆச்சர்ய பகுதிக்கு வருவோம்,, இங்கு ஒரு 'கற்பனை கதை' தேவைப்படுகிறது, 
இப்போது நீங்கள் நிற்பது, இந்தியா வேர்ல்ட் கப் வாங்குன மும்பை 'வாங்கடே ஸ்டேடியம்', உங்கள் கையில், தோணி கடைசியாக சிக்சர் அடித்து பவுண்டரியை விட்டு வெளியே அனுப்பின அதே பந்து, இப்போது நான் இரண்டு கேள்விகள் கேட்கிறேன், அந்த மைதானத்தை ஒரு துளி இடம் கூட விடாமல் மனிதர்களால் நிரப்ப வேண்டும், எத்தனை மனிதர்கள் தேவைப்படுவார்கள்??? அதே மைதானம், கிரிக்கெட் பந்துகளால் நிரப்பப்படவேண்டும்,, எத்தனை பந்துகள் தேவைப்படும் ?? 
ஒரே பதிலாக கூருவேதேன்றால்,,, கேலரியில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மானிடப் பதர்களை (ரஜினி, அமீர்கான் உட்பட) வரிசையாக நிற்க வைத்து கண்டுபிடிக்கலாம் (மற்றும் , எண்ணற்ற கிரிக்கெட் பந்துகளை ஆர்டர் செய்து வரிசையாக நிற்க வைத்து கண்டுபிடிக்கலாம்),, கிட்டத்தட்ட ஒரு நாள் ஆகும், அல்லது, ஒரு மனிதனின் கால்தடத்தின் 'ஏரியா'வை (Area) கணக்கு செய்து,(மற்றும் ஒரு பந்து ஆக்கிரமிக்கும் ஏரியாவை கணக்கு செய்து ) மைதானத்தின் மொத்த ஏரியாவில் வகுத்தால் எத்தனை மனிதர்களை (பந்துகளை) வைத்து அம்மைதானத்தை நிரப்ப முடியும் என்று ஒரு நிமிடத்திலும் கண்டுபிடிக்கலாம் (கொஞ்சம் அசம்ப்ஷன் தேவைப்படும்), சரியாக கணக்கு செய்து விடையை அளித்து விட்டால் உங்களுக்கு ஒரு சாப்ட்வேர் கம்பனியில் வேலை உறுதி, ஆனால் ஒரு இயற்பியல்வாதி (physicist ), உங்கள் விடைகளை பார்த்தால் காரி துப்புவார், சத்தியமாக உங்களுக்கு வேலை கிடையாது (பிசிக்ஸ் படிச்ச யாருக்குமே வேல கிடைக்கல என்பது தனிப்பட்ட விஷயம், வேற டிப்பார்ட்மெண்ட்).
ஒரு கிரிக்கெட் மைதானம் முழுவதும் எத்தனை கிரிக்கெட் பந்துகளை வைத்து நிரப்பலாம் என்ற கேள்விக்கு பதில்: "ஒரே ஒரு பந்து" என்பது தான்,
எப்படி என்றால், கொஞ்சம் கவனிப்பு, கொஞ்சம் கற்பனை இருந்தால் போதும்,, 
உங்கள் கையில் இருக்கும் அந்த கிரிக்கெட் பந்தை, எட்டு சமமான துண்டுகளாக வெட்டவும், இப்போது உங்கள் கையில் எட்டு துண்டுகள் உள்ளன, அந்த 'எட்டு' துண்டுகளையும் எடுத்து, ஒவ்வொரு துண்டையும், மீண்டும் 'எட்டு' சமமான துண்டுகளாக வெட்டவும், இப்போது உங்கள் கையில் இருப்பது (8*8 = 64) 64 துண்டுகள், இப்போது அந்த 64 துண்டுகளையும் எடுத்து, ஒவ்வொரு துண்டையும், மீண்டும் 'எட்டு' சமமான துண்டுகளாக வெட்டவும், இப்போது உங்கள் கையில் இருப்பது (64*8 = 512) 512 சிறு துண்டுகள், இவை அனைத்தையும் எடுத்து, 512 சிறு துண்டுகளையும், மீண்டும், எட்டு சமமான துண்டுகளாக வெட்டவும்,, இப்படியே மொத்தம் 24 தடவை செய்யுங்கள்,, (ஆல்ரெடி மூணு தடவ வெட்டியாச்சு )
கடைசியாக கிடைக்கும் மொத்த துண்டுகளை வைத்து கிரிக்கட் மைதானம் மட்டுமில்லை அதன் கேலரியை கூட நிரப்பி விடலாம்,,,
(சந்தேகமிருந்தால்,, கடைசியாக, மொத்தம் உள்ள துண்டுகளை கையில் எடுத்து கொள்ளவும், ஒரு துண்டு எவ்வளவு இடத்தை ஆக்கிரமிப்பு (Area) செய்கிறது என்று கண்டுபிடிக்கவும், அந்த ஆக்கிரமைப்பையும் மொத்த துண்டுகளையும் பெருக்கி வாங்கடே மைதானத்தின் மொத்த பரப்பளவு கூட ஒப்பிட்டு பார்க்கவும்,, (Total no of particles * surface area of a single particle ~= area of ground) கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும்,, )

மனிதர்களை வெட்டி நிரப்பினால் திகாரில் தூக்கு கயிறு காத்து கொண்டிருக்கிறது என்பதால் அத்திட்டம் கை விடப்படுகிறது :)

பரிணாம வளர்ச்சி


பரிணாம வளர்ச்சி



எவ்ளோ பெரிய டைனோசரா இருந்தாலும் அதன் மண்டை/ உடல் மீது மீது உக்காந்து விளையாட்டு காட்டும் சிட்டுக்குருவிய கைய வச்சு தட்டிவிட முடியாது. 

 இதுவே, குரங்கு இனத்தின் குடும்பத்தில் இருக்கும் நம் மீது (இங்கு 

நம்மையும் குரங்கையும் பிரித்து பார்த்தால் டார்வின் குத்தம் ஆகிவிடும்) 

அமர்ந்தால், சிட்டுக்குருவி இனத்தில் மீதமிருக்கும் ஒன்னு ரெண்டு 

உயிரிகளையும் ஒன்றாக பிடித்து 'குருவி' பிரியாணி செய்து விடுவோம்

 என்பது குருவியும் அறிந்ததே,, காக்காவும் அனுபவித்ததே,, 

Sunday 7 April 2013


1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற முடியுமா...? – முடியும்...!






இன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1gb கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள். அந்த கார்டை எப்படி 2gb கார் டாக என்பதை கிழே கொடுக்கப் பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி சுலபமாக மாற்றலாம்.

1.இந்த வழிமுறையானது 1GBமெமரி கார்டில் மட்டுமே வேலை செய்யும். முடிந்தவரை 1GB மெமரி கார்டை மட்டுமே பயன்படுத்துங்கள்.

2. இந்த வழிமுறையை பயன்படுத்தும் முன்பு உங்கள் மெமரி கார்டில் உள்ள தரவுகளை எல்லாம் நீங்கள் ஒரு பதிவு எடுத்துவைத்து கொள் வது நல்லது.

3.இப்போது இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்.
தரவிறக்கச் சுட்டி
http://www.mediafire.com/?b27rb10ub00m94d

4. தரவிறக்கம் செய்த மென் பொருளை ஓபன் செய்யும்போ து இது போன்ற வடிவில் காட் டும்.

5. மென்பொருள் ஓபன் செய்த உடன் அதில் 955MB DEFAULT-க காட்டப்படும் ஆதலால் மேலே கூறியதுபோல் 1GB மெமரி கார் டை மட்டும் பயன் படுத்தவும்.

6. இப்போது உங்கள் மெமரி கார் டை கணினியில் சொருகவும். படத்தில் தோன்றுவது போல 955MB காட் டபடும்

7. (FIX)பிக்ஸ் என்ற option தேர்வு செய்து Yes பட்டனை கிளிக் செய்யவும்.

8. இப்பொது உங்களது மெமரி கார்டில் உள்ள தரவுகள் எல்லா ம் அழிந்து 2GB மெமரி கார்டாக மாறிவிடும்.

9. மெமரி கார்டை கணினியில் அகற்றிவிட்டு மீண்டும் கணினி யில் சொருகவும். மெமரி கார்டி ன் அளவு 1912MB என்று காட்டபடும்.