Thursday 7 February 2013

க்வாண்டம் பிசிக்ஸ் : சில அறி(ரி)ய குறிப்புகள்.






க்வாண்டம் பிசிக்ஸ் : சில அறி(ரி)ய குறிப்புகள்.


**அறிவியலின் உச்சக்கட்ட கண்டுபிடிப்பு,, அறிவியலை அடுத்த படிக்கு எடுத்து சென்றது... முக்கியமாக கடவுள் எதிர்ப்பின் விதை.....

**இத பத்தி செத்து போன எங்க பாட்டி மேல சத்தியமா எதுவும் தெரியாதுன்னு எங்க வேணும்னாலும் தைரியமா சொல்லுங்க, ஏன்னா, ஐன்ஸ்டீன் என்ற அப்பாடக்கரே இத புரிஞ்சுக்க முடியாம கடைசி காலம் வரைக்கும் கட்டுமரமா தத்தளிச்சிக்கிட்டு இருந்தாரு.... கடைசியா அவர் சொன்ன வார்த்த ரொம்ப பேமஸ்... அது,,,(God never throws dies) கடவுள் தாயம் விளையாடுவதில்லை



**சிம்பிளா வெளக்கனும்னா.... நீங்க ஒரு மணி நேரமா பாத்ரூம்ல(என்னவோ பண்ணிட்டு) மட்டும் தான் இருக்கீங்க.. ஆனா உங்க மனைவி வந்து உங்கள பக்கத்து வீட்டுல பார்த்தேன்னு சொல்லி சண்ட போட்டா... டங்க்ஸ்டன் ஆகாதீங்க... ஏன்னா.. க்வாண்டம் பிசிக்ஸ் படி பார்த்தால் இது சத்தியமாக உண்மை...

**அதெப்படி நான் பாத்ரூம்ல இருக்கும் போது பக்கத்து வீட்ல இருக்க முடியும்னு கேட்டீங்கன்னா பதில் இதோ....." க்வாண்டம் பிசிக்ஸ் படி பார்த்தால்.. நாம் மற்றும் நம்மை சுற்றி இருப்பவை அனைத்தும் அணுவின் கூட்டமைப்பு, ஒரு அணு என்பது எலெக்ட்ரான், ப்ரோட்டான், நியூட்ரான் போன்ற நுண் துகள்களால் ஆனது, இப்போது, நம் உடம்பில் இருக்கும், ஒரு அணுவில் உள்ள ஒரு எலெக்ட்ரான், சரியாக இக்கன நேரத்தில் எங்குள்ளது என்று நான் படம்பிடித்தால் அல்லது கணக்குள் மூலமாக கண்டறிந்தால் எனக்கு கிடைக்கும் பதில்... ஒரு இடத்தில் இல்லை,,, ஒரு துளி நேரத்தில் பல இடத்தில் உள்ளது.. உச்சமாக சொன்னால்.. அது அடுத்த நொடியில் எங்கிருக்கும் என்றே சொல்ல முடியாது.. இது எலெக்ட்ரானுக்கு மட்டுமல்ல அணுவுக்கும் பொருந்தும்.. நாம் அணுக்களின் கூட்டமைப்பு.. இப்போது முடிவு செய்து கொள்ளுங்கள்,,, நீங்கள் உங்கள் பாத்ரூமில் தான் இருந்தீர்களா ????"

**இதை தான் மாயை என்று தமிழில் கூறுவார்கள்

**இப்போது நீங்களும் க்வாண்டம் பிசிக்ஸ் பற்றி யாரிடம் வேணும்னாலும் கட்டவிழ்த்து ... ஏன்னா... இது பலருக்கு புரியாது

டைம் மெசின்-II





டைம் மெசின்-II




சிறப்பு சார்பியல் தத்துவம்:


ஐன்ஸ்டீனின் சிறப்பு சார்பியல் தத்துவம் தான் இது வரை மனிதர்கள் கண்டுபிடித்தவைகளில் சிறந்தது, சமன்பாடுகளின் (Equations) வழியில் புரிந்து கொள்ள கடினமானதும் கூட. ஆனால் அதன் சாராம்சம், ஒவ்வொரு மனிதனும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியது. டைம் மெஷின் (கால இயந்திரம்) என்ற சிந்தனை பிறந்தது இதன் முடிவுகளில் இருந்து தான். நம்மால் எதிர் காலத்துக்கு செல்ல முடியுமா ??. இயற்பியலின் விதிகளின் படி பார்த்தால், கண்டிப்பாக முடியும்.

ஒரு சின்ன கற்பனை கதையை நான் கூறுகிறேன்.

நான் இந்த பூமி பந்தை சுற்றியவாறு ஒரு தண்டவாளம் அமைக்கிறேன், என்னுடைய ரயிலை ஓட்டுவதற்காக, அதாவது, சென்னையில் கிளம்பி, பூமியை ஒரு முறை சுற்றி விட்டால், மீண்டும் சென்னைக்கே வந்து விடுவேன்,

ஆனால் இந்த ரயிலில் நான் மட்டுமே பயணிக்க போகிறேன். எனது ரயில் அதிவேகமானது, ஒளியின் வேகத்தில் என்னால் பயணிக்க முடியும், அதாவது, ஒரு நொடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர்கள் வேகத்தில் என்னால் பயணிக்க முடியும்.

நான் ரயிலை கிளப்புவதற்கு முன்னர், ஒரு கடைக்கு சென்று இரண்டு கடிகாரங்கள் வாங்குகிறேன், இரண்டும் ஒத்த பண்புடையவை ஒரே மாதிரி தான் செயல் படும்.

அதில் ஒன்றை உங்களிடம் கொடுத்து விடுகிறேன், மற்றொன்றை என் ரயிலில் வைத்து விடுகிறேன். நீங்கள் உங்கள் வீட்டில் தான் இருக்க போகிறீர்கள். நான் எனது வண்டியை கிளப்பும் போது, சரியாக இரண்டு கடிகாரங்களையும் இயக்க வேண்டும்.

"இப்போது எனது வயது 26. நான் எது வரை பயணிக்க போகிறேன் என்றால், எனது கடிகாரத்தில் 50 வருடங்கள் ஓடி முடியும் வரை. வெற்றிகரமாக என் பயணத்தை முடித்து விட்டு பூமியில் நான் கால் வைக்கும் போது எனக்கு வயது 76. இப்பொழுது நான் உங்களை தேடி உங்கள் வீட்டிற்க்கு சென்றால், எனக்கு ஏமாற்றமே மிஞ்சும். ஏனென்றால், நீங்கள் இறந்து ஏறத்தாழ 500 வருடங்களுக்கு மேல் ஆகி இருக்கும்."

இது தான் உண்மை. நேரம் என்பது நீங்கள் பயணிக்கும் வேகத்தை சார்ந்தது, வேகம் கூடினால் நேரம் சுருங்கும், சாதாரணமாக நாம் உணரும் ஒரு ஐந்து நிமிடம் என்பது அங்கு ஒரு நொடியாக நாம் உணரலாம். நேரம் மட்டுமல்ல, நீங்கள் வேகமாக செல்லும் பொது உங்களை சுற்றி இருக்கும் வெளி (Space) சுருங்கும், உங்களை மேற்கொண்டு செல்ல விடாதவாறு சுருங்கும், மற்றும், உங்களின் எடை பன்மடங்காக உயரும்.

நீங்கள் நிலையாக இருக்கும் போது தனுஷ் எடையில் இருந்தால், ஒளியின் வேகத்தில் பயணிக்கும் பொது இளைய திலகம் பிரபுவின் எடையை அடைந்து விடுவீர்கள்.

நாம் பூமியின் மீது ஒட்டிக்கொண்டு, அதன் வேகத்தில் சென்று கொண்டிருப்பதால், நாம் உணரும் நேரம், எடை, வெளியின் அழுத்தம் ஒரே மாதிரியாக இருக்கிறது. மொத்தத்தில், இவை அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்தது (அதனால் தான் இது சார்பியல் தத்துவம்). வேகம் கூடினால் எதிர்காலதிற்கு செல்லலாம். ஆனால் வேகத்தை குறைத்து கடந்த காலத்திற்கு செல்வது சாத்தியமில்லை.

'கால(ய)மே' இது பொய்யடா... வெறும் காற்றடைத்த பையடா

டைம் மெசின்




டைம் மெசின்




சுமார் 300,000 km/s என்ற வேகத்தில் ஓடக்கூடிய ஒரு பைக் கண்டுபிடிங்க, கைல ஒரு வாட்ச் கட்டிக்கோங்க, ரெண்டு நிமிஷம் பைக் ஓட்டிட்டு வாரேன்னு வீட்ல சொல்லிட்டு பைக்க ஸ்டார்ட் பண்ணி முழு வேகத்தில் (300,000 km/s) வண்டிய ஓட்ட ஆரம்பிச்சு, உங்களோட உள்ளுனர்வு படி ரெண்டு நிமிஷம் மட்டும் வண்டிய ஓட்டுங்க, உங்க கை கடிகாரத்துலயும் சரியாய் நீங்க கெளம்பி ரெண்டு நிமஷம் தான் ஆயிடுக்கும் ஆனா, வண்டிய நிப்பாட்டிட்டு உங்க வீட்டுக்கு வந்து பார்த்தால்.... உங்கள் வீடே அங்கு இருக்காது, நீங்கள் பார்த்த, உங்களுக்கு தெரிந்த மனிதர்கள் அனைவரும் இறந்து 150 வருடங்களுக்கு மேல் ஆகி இருக்கும். அதாவது, நீங்கள் வீட்டில் இருந்து கிளம்பி 200 வருடங்கள் ஆகி இருக்கும், ஆனால் நீங்கள் ஒளியின் வேகத்தில் பயணித்ததால் உங்களுக்கு இரண்டு நிமிடங்கள் தான் ஆகி இருக்கும், பிற்காலதுக்கும் வர இயலாது, ஏனென்றால் நீங்கள் இரண்டு நிமிடம் ஊர் சுற்றி விட்டு வருவதற்குள், பூமி தன்னை தானே 200 முறை சுற்றி விட்டது. (இன்னும் விரிவான விளைவுகள்,, வில் ரைட் லேட்டர் )

#டைம் மெசின் கண்டுபிடிச்சு,, எதிர் காலத்துக்கு போறதெல்லாம் சப்ப மேட்டரு தான ??

தஞ்சை கோயிலின் பேசும் சிற்பம் !!


தஞ்சை கோயிலின் பேசும் சிற்பம் !!


"பேசும் சிற்பம்" என்ற தலைப்பைக் கண்டதும் வியப்படைந்துவிடீர்களா..??

உங்கள் வியப்பு நிச்சயம் குறையாது. இந்த சிற்பம் பேசுவது வாய் மொழியால் அல்ல, உடல் மொழியால்.... வாருங்கள் தஞ்சை கோயிலில் உள்ள தமிழர்களின் சாதனையை காண்போம் !!

படம் 1 :
18 அடி உயரமுடைய ஒரே கல்லில் உருவான துவாரபாலகர், காலை உயர்த்தி நிற்கும் அந்த துவாரபாலகருக்கு நான்கு கரங்கள் உள்ளன. அதை சுற்றி இருக்கும் சிற்ப வேலைபாடுகளை சற்று கூர்ந்து கவனிப்போம், காலின் அடியில் ஒரு சிங்கம், ஒரு பாம்பு, சாதாரணமாக பார்ப்பவர் கண்ணிற்கு இவைகள் மட்டும் தான் புலப்படும்.

படம் 2 :
சாதரணமாக பார்த்தால் தெரியாத அதன் பிரம்மாண்டத்தை, ஒரு யானையுடன் ஒப்பிட்டு பாருங்கள் எப்படி விசுவரூபம் எடுத்து நிற்கிறது, அந்த துவாரபாலகர் சிற்பம் என்பது நன்கு புலப்படும் 




படம் 3 :
சரி துவாரபாலகர், காலின் கீழ் இருக்கும் அந்த பாம்பை சற்று உற்று நோக்குங்கள், பாம்பின் வாயில் என்ன ? ஆஹா ஒரு யானை !! பின்புறமாக யானையை விழுங்கும் பாம்பு, யானை எவ்வளவு பெரியது, அதையே விழுங்கும் பாம்பு என்றால் அது எவ்வளவு பெரியதாக இருக்கவேண்டும் !!!?? அவ்வளவு பெரிய அந்த பாம்பே, அந்த துவரபாலகரின் காலில் ஒரு அரைஞான் கயிறு போல சிறிதாக தொங்கிக்கொண்டு இருக்கிறதென்றால் அந்த துவாரபாலகர் எவ்வளவு பெரிய ஆளாக இருக்க வேண்டும்…?!?!?!?!?!?

இதனால் என்ன தான் கூற வருகிறார்கள் ? இவ்வளவு பெரிய ஆள் நானே வெளியே காவல் தான் காத்துக்கொண்டிருக்கிறேன், உள்ளே இவற்றை எல்லாம் காட்டிலும் பெரியவர் இருக்கிறார், சற்று அமைதியாக செல்லுங்கள் ! என்பதை வாயிலில் நிற்கும் இந்த சிற்பத்தில் எவ்வளவு அழகாக காட்டி இருக்கிறார்கள்.

வாய் பேசாத அந்த சிற்பம், தன் கையால் பேசிக் கொண்டிருப்பதையும் சற்று கவனியுங்கள்…

(இ-1) : இடது புறம் மேலே இருக்கும் கை உள்ளே இருக்கும் கடவுளை நோக்கி காட்டிக்கொண்டு இருக்கின்றது.

(இ-2) : அதற்கு கீழே இருக்கும் கை நின்றுகொண்டிருக்கும் தான் எவ்வளவு பெரியவன் என்பதை அந்த பாம்பை பார்த்து தெரிந்து கொள்ள சொல்கின்றது

(வ-1) : வலது புறம் மேலே இருக்கும் கை உள்ளே இருப்பவர் எப்பேர் பட்டவர் என்பதை கையை மடித்து எவ்வளவு அழகாக பூரிப்புடன் காட்டிக் கொண்டு இருக்கிறது.

(வ-2) : கீழே இருக்கும் கை எச்சரிப்பதை காட்டுகிறது.

நான் சொல்வதை எல்லாம் மறந்து விட்டு இப்போது நீங்களே இந்த நான்கையும் ஒப்பிட்டு சற்று கற்பனை உலகிற்கு செல்லுங்கள், வார்த்தைகள் ஊமையாகி, அந்த சிற்பியை காதலிக்க துவங்கி விடுவீர்கள், தமிழர்களின் ஆற்றலை உணர்வீர்கள்.

இது ஒன்று தானா..?? இல்லவே இல்லை.... இது போன்று எத்தனையோ கோயில்களில், எத்தனையோ சிற்பங்கள் நம்மிடம் பேசிக்கொண்டு தான் இருக்கின்றன, அவைகள் ஒவ்வொன்றும் எதையோ ஒன்றை குறிப்பால் உணர்த்திக்கொண்டு தான் இருக்கின்றன.

இவற்றை எல்லாம் நாம் கவனிக்கிறோமா..?? இல்லை மாறாக அழிக்கிறோம் !!! அடுத்த முறை கோயில்களுக்கு செல்லும் போது, இது போன்ற சிற்பங்களின் மீது விபூதிகொட்டுவது, அதன் மீது சாய்வது, அவற்றின் மீது பெயர்களை பதிப்பது, அதை சேதப் படுத்துவது போன்ற எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம்.!!

அழிவிலிருந்து காப்பாற்றுவோம் நம் கலைப் பொக்கிஷங்களை.!!!