Monday, 29 April 2013



நாம் எங்கே இருக்கிறோம்?


இப்போது ஒரு எளிய கேள்வி. நாம் எங்கே இருக்கிறோம்?

இந்த கேள்விக்கு அறிவியலின் விடையை அறிந்து, அசைபோட்டு பார்த்தீர்களேயானால் அதில் ஒரு ஞானம் அடங்கியிருப்பது உணரப்படும் (இதை பலரிடம் நேரடியாக நான் கேட்டதுண்டு. விடைகள் வெகு சில முறைகள் மட்டுமே துல்லியமாக வந்தன. பல நேரங்களில் அவை பரிதாபப்படும் வகையில் இருந்தன). முக்கியாமான விஷயம், பதிலை விரிவாக்கிக்கொண்டே போக வேண்டும். உதாரணம், இந்தியாவில் என்று பதில் வந்தால், இந்தியா எங்கே உள்ளது? என்று கேட்க வேண்டும். ஒரு முறை உங்களையே நாம் எங்கே இருக்கிறோம்? என்று கேட்டுக்கொண்டு, உங்களால் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்று பாருங்கள். விடை கீழே உள்ளது. ஒப்பிட்டு கொள்ளலாம்.
1. ஊர்
2. மாநிலம்
3. நாடு
4. கண்டம்
5. பூமி
நான் இந்த கேள்வியை சுமார் 100 தமிழக சாமான்யர்களிடம் கேட்டிருக்கிறேன். கிட்டத்தட்ட 50 பேர் இத்துடன் நின்றுவிட்டனர்.
6. சூரிய குடும்பம் (சூரிய குடும்பத்தில் பூமி உட்பட மொத்தம் 8 கிரகங்கள் உள்ளன. அவை சூரியன் எனும் நட்சத்திரத்தை சுற்றி வருகின்றன. பூமி மூன்றாவது கிரகம். http://upload.wikimedia.org/wikipedia/commons/a/a9/Planets2013.jpg
உபரி தகவல்: ஒளி/வெளிச்சம் என்பது ஒரு நொடியில் 3 லட்சம் கி.மீ வேகத்தில் பயணிக்கும். இருந்தும், அது சூரியனில் இருந்து பூமியை அடைய 500 நொடிகள் ஆகின்றது. நினைத்து பாருங்கள் பூமி - சூரியன் இடைவெளியை)
7. பால்வழி திரள் (இது சூரியன் உட்பட கிட்டத்தட்ட 400 பில்லியன் (1பில்லியன் என்பது 100 கோடி) நட்சத்திரங்களை கொண்ட ஒரு நட்சத்திர கூட்டம், சூரியன் இதன் மையத்தை சுற்றி வருகிறது.
உபரி தகவல்: ஒரு நொடியில் 3 லட்சம் கி.மீ வேகத்தில் பயணிக்கும் ஒளி, ஒரு வருடத்தில் சுமார் 10 ட்ரில்லியன் கி.மீ (1 ட்ரில்லியன் என்பது 100000 கோடி) பயணிக்கும். இது ஒரு ஒளி ஆண்டு ஆகும். பால்வழி திரளின் விட்டம் சுமார் 120000 ஒளி ஆண்டு) http://casswww.ucsd.edu/archive/public/tutorial/MW.html
8. லோக்கல் குரூப்
9. விர்கோ சூப்பர் கிளஸ்டர்
http://upload.wikimedia.org/wikipedia/commons/b/b6/Earth%27s_Location_in_the_Universe_%28JPEG%29.jpg
10. பேரண்டம்/ பிரபஞ்சம் (இதற்கு இன்னொரு அர்த்தம் 'அனைத்தும்'. இதில் நாம் வாழும் பால்வழி திரள் போன்று கிட்டத்தட்ட 200 பில்லியன் நட்சத்திர கூட்டங்கள் உள்ளன. இதன் எல்லை இன்னும் கண்டுபிக்கப்படவே இல்லை)
இதுதான் அறிவியல் சொல்லும் விடை. மெல்ல மீண்டும் அசைபோட்டு பாருங்கள்.
நாம் எங்கே இருக்கிறோம்? எல்லையில்லா பிரபஞ்சத்தின் எங்கோ ஒரு தொலைந்த மூலையில் நகர்ந்துகொண்டிருக்கும் சிறு பந்தின் மீது... ஹ்ம்ம்ம் அதில்தான் எத்தனை எத்தனை வாழ்க்கை!
Reference and further knowing: http://www.youtube.com/embed/17jymDn0W6U
http://www.britannica.com/EBchecked/media/159542/Scale-of-the-universe
1. ஊர்2. மாநிலம்3. நாடு4. கண்டம்5. பூமி

நான் இந்த கேள்வியை சுமார் 100 தமிழக சாமான்யர்களிடம் கேட்டிருக்கிறேன். கிட்டத்தட்ட 50 பேர் இத்துடன் நின்றுவிட்டனர்.

6. சூரிய குடும்பம் (சூரிய குடும்பத்தில் பூமி உட்பட மொத்தம் 8 கிரகங்கள் உள்ளன. அவை சூரியன் எனும் நட்சத்திரத்தை சுற்றி வருகின்றன. பூமி மூன்றாவது கிரகம். http://upload.wikimedia.org/wikipedia/commons/a/a9/Planets2013.jpg 

உபரி தகவல்: ஒளி/வெளிச்சம் என்பது ஒரு நொடியில் 3 லட்சம் கி.மீ வேகத்தில் பயணிக்கும். இருந்தும், அது சூரியனில் இருந்து பூமியை அடைய 500 நொடிகள் ஆகின்றது. நினைத்து பாருங்கள் பூமி - சூரியன் இடைவெளியை)

7. பால்வழி திரள் (இது சூரியன் உட்பட கிட்டத்தட்ட 400 பில்லியன் (1பில்லியன் என்பது 100 கோடி) நட்சத்திரங்களை கொண்ட ஒரு நட்சத்திர கூட்டம், சூரியன் இதன் மையத்தை சுற்றி வருகிறது.உபரி தகவல்: ஒரு நொடியில் 3 லட்சம் கி.மீ வேகத்தில் பயணிக்கும் ஒளி, ஒரு வருடத்தில் சுமார் 10 ட்ரில்லியன் கி.மீ (1 ட்ரில்லியன் என்பது 100000 கோடி) பயணிக்கும். இது ஒரு ஒளி ஆண்டு ஆகும். பால்வழி திரளின் விட்டம் சுமார் 120000 ஒளி ஆண்டு) http://casswww.ucsd.edu/archive/public/tutorial/MW.html

8. லோக்கல் குரூப்

9. விர்கோ சூப்பர் கிளஸ்டர் http://upload.wikimedia.org/wikipedia/commons/b/b6/Earth%27s_Location_in_the_Universe_%28JPEG%29.jpg 

10. பேரண்டம்/ பிரபஞ்சம் (இதற்கு இன்னொரு அர்த்தம் 'அனைத்தும்'. இதில் நாம் வாழும் பால்வழி திரள் போன்று கிட்டத்தட்ட 200 பில்லியன் நட்சத்திர கூட்டங்கள் உள்ளன. இதன் எல்லை இன்னும் கண்டுபிக்கப்படவே இல்லை)இதுதான் அறிவியல் சொல்லும் விடை. மெல்ல மீண்டும் அசைபோட்டு பாருங்கள்.நாம் எங்கே இருக்கிறோம்? எல்லையில்லா பிரபஞ்சத்தின் எங்கோ ஒரு தொலைந்த மூலையில் நகர்ந்துகொண்டிருக்கும் சிறு பந்தின் மீது... ஹ்ம்ம்ம் அதில்தான் எத்தனை எத்தனை வாழ்க்கை!Reference and further knowing: http://www.youtube.com/embed/17jymDn0W6Uhttp://www.britannica.com/EBchecked/media/159542/Scale-of-the-universe



நேனோ டெக்னாலஜி



நேனோ டெக்னாலஜியில் (Nano- technology) அப்படி என்ன தான் இருக்கிறது, என்ன தான் அதன் சிறப்பம்சம் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமில்லை தான், ஆனால் நம் குழந்தைகள்/ பேரன் பேத்திகள் எதிர்காலத்தில், ஒரு சந்தர்பத்தில், புரிந்து கொள்வார்கள், நம்ம அப்பா/ தாத்தா ஒரு டம்மி பீசு,, நேனோ டெக்னாலஜின்னா அவருக்கு என்னான்னு தெரியாது, அவர் போன தலைமுறைல வாழ்ந்துட்டு இருக்காரு சொன்னாலும் புரியாது,, (ஒரு செல்போனை உபயோகிக்க எங்க தாத்தா எவ்ளோ கஷ்டப்பட்டாருன்னு எனக்கு தான் தெரியும் )

பிகாஸ், எதிர்காலம் நேனோ மேட்டீரியல்சால் நிரம்பி இருக்கும்,,, இப்போ விஷயம் அதுவல்ல, நேனோ என்றால் என்ன ?? நேனோ மெட்டீரியல்ஸ் அப்படி என்ன ஆச்சர்யமிக்க ஒரு விஷயம் ?? என்ற கேள்விக்கு பதில்..
நீங்கள், கையில் ஒரு கத்திரி எடுத்து கொள்ளுங்கள் ஒரு 'மீட்டர்' நீளமுள்ள ஒரு நூலை எடுத்து கொள்ளுங்கள், இப்போது அந்த நூலை, நீங்கள் சிறு சிறு துண்டுகளாக வெட்ட போகிறீர்கள், எப்படி என்றால், 1000000000 சமமான துண்டுகளாக வெட்ட வேண்டும், வெட்டி போட்ட துண்டுகளில் ஒரு துண்டை மட்டும் எடுத்து கொள்ளுங்கள், அது தான் ஒரு 'நேனோ மீட்டர்' (Nano-meter = 10^(-9) m) என்ற அளவு,, இப்போது இவ்வுலகில் உள்ள எந்த பொருளையும் உங்கள் கையில் இருக்கும் அந்த நூலின் அளவிற்கு மாற்றி விட்டால் அது தான் நேனோ மெட்டீரியல்,
இப்போது நேனோ மெட்டீரியல்சின் ஆச்சர்ய பகுதிக்கு வருவோம்,, இங்கு ஒரு 'கற்பனை கதை' தேவைப்படுகிறது, 
இப்போது நீங்கள் நிற்பது, இந்தியா வேர்ல்ட் கப் வாங்குன மும்பை 'வாங்கடே ஸ்டேடியம்', உங்கள் கையில், தோணி கடைசியாக சிக்சர் அடித்து பவுண்டரியை விட்டு வெளியே அனுப்பின அதே பந்து, இப்போது நான் இரண்டு கேள்விகள் கேட்கிறேன், அந்த மைதானத்தை ஒரு துளி இடம் கூட விடாமல் மனிதர்களால் நிரப்ப வேண்டும், எத்தனை மனிதர்கள் தேவைப்படுவார்கள்??? அதே மைதானம், கிரிக்கெட் பந்துகளால் நிரப்பப்படவேண்டும்,, எத்தனை பந்துகள் தேவைப்படும் ?? 
ஒரே பதிலாக கூருவேதேன்றால்,,, கேலரியில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மானிடப் பதர்களை (ரஜினி, அமீர்கான் உட்பட) வரிசையாக நிற்க வைத்து கண்டுபிடிக்கலாம் (மற்றும் , எண்ணற்ற கிரிக்கெட் பந்துகளை ஆர்டர் செய்து வரிசையாக நிற்க வைத்து கண்டுபிடிக்கலாம்),, கிட்டத்தட்ட ஒரு நாள் ஆகும், அல்லது, ஒரு மனிதனின் கால்தடத்தின் 'ஏரியா'வை (Area) கணக்கு செய்து,(மற்றும் ஒரு பந்து ஆக்கிரமிக்கும் ஏரியாவை கணக்கு செய்து ) மைதானத்தின் மொத்த ஏரியாவில் வகுத்தால் எத்தனை மனிதர்களை (பந்துகளை) வைத்து அம்மைதானத்தை நிரப்ப முடியும் என்று ஒரு நிமிடத்திலும் கண்டுபிடிக்கலாம் (கொஞ்சம் அசம்ப்ஷன் தேவைப்படும்), சரியாக கணக்கு செய்து விடையை அளித்து விட்டால் உங்களுக்கு ஒரு சாப்ட்வேர் கம்பனியில் வேலை உறுதி, ஆனால் ஒரு இயற்பியல்வாதி (physicist ), உங்கள் விடைகளை பார்த்தால் காரி துப்புவார், சத்தியமாக உங்களுக்கு வேலை கிடையாது (பிசிக்ஸ் படிச்ச யாருக்குமே வேல கிடைக்கல என்பது தனிப்பட்ட விஷயம், வேற டிப்பார்ட்மெண்ட்).
ஒரு கிரிக்கெட் மைதானம் முழுவதும் எத்தனை கிரிக்கெட் பந்துகளை வைத்து நிரப்பலாம் என்ற கேள்விக்கு பதில்: "ஒரே ஒரு பந்து" என்பது தான்,
எப்படி என்றால், கொஞ்சம் கவனிப்பு, கொஞ்சம் கற்பனை இருந்தால் போதும்,, 
உங்கள் கையில் இருக்கும் அந்த கிரிக்கெட் பந்தை, எட்டு சமமான துண்டுகளாக வெட்டவும், இப்போது உங்கள் கையில் எட்டு துண்டுகள் உள்ளன, அந்த 'எட்டு' துண்டுகளையும் எடுத்து, ஒவ்வொரு துண்டையும், மீண்டும் 'எட்டு' சமமான துண்டுகளாக வெட்டவும், இப்போது உங்கள் கையில் இருப்பது (8*8 = 64) 64 துண்டுகள், இப்போது அந்த 64 துண்டுகளையும் எடுத்து, ஒவ்வொரு துண்டையும், மீண்டும் 'எட்டு' சமமான துண்டுகளாக வெட்டவும், இப்போது உங்கள் கையில் இருப்பது (64*8 = 512) 512 சிறு துண்டுகள், இவை அனைத்தையும் எடுத்து, 512 சிறு துண்டுகளையும், மீண்டும், எட்டு சமமான துண்டுகளாக வெட்டவும்,, இப்படியே மொத்தம் 24 தடவை செய்யுங்கள்,, (ஆல்ரெடி மூணு தடவ வெட்டியாச்சு )
கடைசியாக கிடைக்கும் மொத்த துண்டுகளை வைத்து கிரிக்கட் மைதானம் மட்டுமில்லை அதன் கேலரியை கூட நிரப்பி விடலாம்,,,
(சந்தேகமிருந்தால்,, கடைசியாக, மொத்தம் உள்ள துண்டுகளை கையில் எடுத்து கொள்ளவும், ஒரு துண்டு எவ்வளவு இடத்தை ஆக்கிரமிப்பு (Area) செய்கிறது என்று கண்டுபிடிக்கவும், அந்த ஆக்கிரமைப்பையும் மொத்த துண்டுகளையும் பெருக்கி வாங்கடே மைதானத்தின் மொத்த பரப்பளவு கூட ஒப்பிட்டு பார்க்கவும்,, (Total no of particles * surface area of a single particle ~= area of ground) கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும்,, )

மனிதர்களை வெட்டி நிரப்பினால் திகாரில் தூக்கு கயிறு காத்து கொண்டிருக்கிறது என்பதால் அத்திட்டம் கை விடப்படுகிறது :)

பரிணாம வளர்ச்சி


பரிணாம வளர்ச்சி



எவ்ளோ பெரிய டைனோசரா இருந்தாலும் அதன் மண்டை/ உடல் மீது மீது உக்காந்து விளையாட்டு காட்டும் சிட்டுக்குருவிய கைய வச்சு தட்டிவிட முடியாது. 

 இதுவே, குரங்கு இனத்தின் குடும்பத்தில் இருக்கும் நம் மீது (இங்கு 

நம்மையும் குரங்கையும் பிரித்து பார்த்தால் டார்வின் குத்தம் ஆகிவிடும்) 

அமர்ந்தால், சிட்டுக்குருவி இனத்தில் மீதமிருக்கும் ஒன்னு ரெண்டு 

உயிரிகளையும் ஒன்றாக பிடித்து 'குருவி' பிரியாணி செய்து விடுவோம்

 என்பது குருவியும் அறிந்ததே,, காக்காவும் அனுபவித்ததே,, 

Sunday, 7 April 2013


1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற முடியுமா...? – முடியும்...!






இன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1gb கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள். அந்த கார்டை எப்படி 2gb கார் டாக என்பதை கிழே கொடுக்கப் பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி சுலபமாக மாற்றலாம்.

1.இந்த வழிமுறையானது 1GBமெமரி கார்டில் மட்டுமே வேலை செய்யும். முடிந்தவரை 1GB மெமரி கார்டை மட்டுமே பயன்படுத்துங்கள்.

2. இந்த வழிமுறையை பயன்படுத்தும் முன்பு உங்கள் மெமரி கார்டில் உள்ள தரவுகளை எல்லாம் நீங்கள் ஒரு பதிவு எடுத்துவைத்து கொள் வது நல்லது.

3.இப்போது இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்.
தரவிறக்கச் சுட்டி
http://www.mediafire.com/?b27rb10ub00m94d

4. தரவிறக்கம் செய்த மென் பொருளை ஓபன் செய்யும்போ து இது போன்ற வடிவில் காட் டும்.

5. மென்பொருள் ஓபன் செய்த உடன் அதில் 955MB DEFAULT-க காட்டப்படும் ஆதலால் மேலே கூறியதுபோல் 1GB மெமரி கார் டை மட்டும் பயன் படுத்தவும்.

6. இப்போது உங்கள் மெமரி கார் டை கணினியில் சொருகவும். படத்தில் தோன்றுவது போல 955MB காட் டபடும்

7. (FIX)பிக்ஸ் என்ற option தேர்வு செய்து Yes பட்டனை கிளிக் செய்யவும்.

8. இப்பொது உங்களது மெமரி கார்டில் உள்ள தரவுகள் எல்லா ம் அழிந்து 2GB மெமரி கார்டாக மாறிவிடும்.

9. மெமரி கார்டை கணினியில் அகற்றிவிட்டு மீண்டும் கணினி யில் சொருகவும். மெமரி கார்டி ன் அளவு 1912MB என்று காட்டபடும்.

Thursday, 7 February 2013

க்வாண்டம் பிசிக்ஸ் : சில அறி(ரி)ய குறிப்புகள்.






க்வாண்டம் பிசிக்ஸ் : சில அறி(ரி)ய குறிப்புகள்.


**அறிவியலின் உச்சக்கட்ட கண்டுபிடிப்பு,, அறிவியலை அடுத்த படிக்கு எடுத்து சென்றது... முக்கியமாக கடவுள் எதிர்ப்பின் விதை.....

**இத பத்தி செத்து போன எங்க பாட்டி மேல சத்தியமா எதுவும் தெரியாதுன்னு எங்க வேணும்னாலும் தைரியமா சொல்லுங்க, ஏன்னா, ஐன்ஸ்டீன் என்ற அப்பாடக்கரே இத புரிஞ்சுக்க முடியாம கடைசி காலம் வரைக்கும் கட்டுமரமா தத்தளிச்சிக்கிட்டு இருந்தாரு.... கடைசியா அவர் சொன்ன வார்த்த ரொம்ப பேமஸ்... அது,,,(God never throws dies) கடவுள் தாயம் விளையாடுவதில்லை



**சிம்பிளா வெளக்கனும்னா.... நீங்க ஒரு மணி நேரமா பாத்ரூம்ல(என்னவோ பண்ணிட்டு) மட்டும் தான் இருக்கீங்க.. ஆனா உங்க மனைவி வந்து உங்கள பக்கத்து வீட்டுல பார்த்தேன்னு சொல்லி சண்ட போட்டா... டங்க்ஸ்டன் ஆகாதீங்க... ஏன்னா.. க்வாண்டம் பிசிக்ஸ் படி பார்த்தால் இது சத்தியமாக உண்மை...

**அதெப்படி நான் பாத்ரூம்ல இருக்கும் போது பக்கத்து வீட்ல இருக்க முடியும்னு கேட்டீங்கன்னா பதில் இதோ....." க்வாண்டம் பிசிக்ஸ் படி பார்த்தால்.. நாம் மற்றும் நம்மை சுற்றி இருப்பவை அனைத்தும் அணுவின் கூட்டமைப்பு, ஒரு அணு என்பது எலெக்ட்ரான், ப்ரோட்டான், நியூட்ரான் போன்ற நுண் துகள்களால் ஆனது, இப்போது, நம் உடம்பில் இருக்கும், ஒரு அணுவில் உள்ள ஒரு எலெக்ட்ரான், சரியாக இக்கன நேரத்தில் எங்குள்ளது என்று நான் படம்பிடித்தால் அல்லது கணக்குள் மூலமாக கண்டறிந்தால் எனக்கு கிடைக்கும் பதில்... ஒரு இடத்தில் இல்லை,,, ஒரு துளி நேரத்தில் பல இடத்தில் உள்ளது.. உச்சமாக சொன்னால்.. அது அடுத்த நொடியில் எங்கிருக்கும் என்றே சொல்ல முடியாது.. இது எலெக்ட்ரானுக்கு மட்டுமல்ல அணுவுக்கும் பொருந்தும்.. நாம் அணுக்களின் கூட்டமைப்பு.. இப்போது முடிவு செய்து கொள்ளுங்கள்,,, நீங்கள் உங்கள் பாத்ரூமில் தான் இருந்தீர்களா ????"

**இதை தான் மாயை என்று தமிழில் கூறுவார்கள்

**இப்போது நீங்களும் க்வாண்டம் பிசிக்ஸ் பற்றி யாரிடம் வேணும்னாலும் கட்டவிழ்த்து ... ஏன்னா... இது பலருக்கு புரியாது

டைம் மெசின்-II





டைம் மெசின்-II




சிறப்பு சார்பியல் தத்துவம்:


ஐன்ஸ்டீனின் சிறப்பு சார்பியல் தத்துவம் தான் இது வரை மனிதர்கள் கண்டுபிடித்தவைகளில் சிறந்தது, சமன்பாடுகளின் (Equations) வழியில் புரிந்து கொள்ள கடினமானதும் கூட. ஆனால் அதன் சாராம்சம், ஒவ்வொரு மனிதனும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியது. டைம் மெஷின் (கால இயந்திரம்) என்ற சிந்தனை பிறந்தது இதன் முடிவுகளில் இருந்து தான். நம்மால் எதிர் காலத்துக்கு செல்ல முடியுமா ??. இயற்பியலின் விதிகளின் படி பார்த்தால், கண்டிப்பாக முடியும்.

ஒரு சின்ன கற்பனை கதையை நான் கூறுகிறேன்.

நான் இந்த பூமி பந்தை சுற்றியவாறு ஒரு தண்டவாளம் அமைக்கிறேன், என்னுடைய ரயிலை ஓட்டுவதற்காக, அதாவது, சென்னையில் கிளம்பி, பூமியை ஒரு முறை சுற்றி விட்டால், மீண்டும் சென்னைக்கே வந்து விடுவேன்,

ஆனால் இந்த ரயிலில் நான் மட்டுமே பயணிக்க போகிறேன். எனது ரயில் அதிவேகமானது, ஒளியின் வேகத்தில் என்னால் பயணிக்க முடியும், அதாவது, ஒரு நொடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர்கள் வேகத்தில் என்னால் பயணிக்க முடியும்.

நான் ரயிலை கிளப்புவதற்கு முன்னர், ஒரு கடைக்கு சென்று இரண்டு கடிகாரங்கள் வாங்குகிறேன், இரண்டும் ஒத்த பண்புடையவை ஒரே மாதிரி தான் செயல் படும்.

அதில் ஒன்றை உங்களிடம் கொடுத்து விடுகிறேன், மற்றொன்றை என் ரயிலில் வைத்து விடுகிறேன். நீங்கள் உங்கள் வீட்டில் தான் இருக்க போகிறீர்கள். நான் எனது வண்டியை கிளப்பும் போது, சரியாக இரண்டு கடிகாரங்களையும் இயக்க வேண்டும்.

"இப்போது எனது வயது 26. நான் எது வரை பயணிக்க போகிறேன் என்றால், எனது கடிகாரத்தில் 50 வருடங்கள் ஓடி முடியும் வரை. வெற்றிகரமாக என் பயணத்தை முடித்து விட்டு பூமியில் நான் கால் வைக்கும் போது எனக்கு வயது 76. இப்பொழுது நான் உங்களை தேடி உங்கள் வீட்டிற்க்கு சென்றால், எனக்கு ஏமாற்றமே மிஞ்சும். ஏனென்றால், நீங்கள் இறந்து ஏறத்தாழ 500 வருடங்களுக்கு மேல் ஆகி இருக்கும்."

இது தான் உண்மை. நேரம் என்பது நீங்கள் பயணிக்கும் வேகத்தை சார்ந்தது, வேகம் கூடினால் நேரம் சுருங்கும், சாதாரணமாக நாம் உணரும் ஒரு ஐந்து நிமிடம் என்பது அங்கு ஒரு நொடியாக நாம் உணரலாம். நேரம் மட்டுமல்ல, நீங்கள் வேகமாக செல்லும் பொது உங்களை சுற்றி இருக்கும் வெளி (Space) சுருங்கும், உங்களை மேற்கொண்டு செல்ல விடாதவாறு சுருங்கும், மற்றும், உங்களின் எடை பன்மடங்காக உயரும்.

நீங்கள் நிலையாக இருக்கும் போது தனுஷ் எடையில் இருந்தால், ஒளியின் வேகத்தில் பயணிக்கும் பொது இளைய திலகம் பிரபுவின் எடையை அடைந்து விடுவீர்கள்.

நாம் பூமியின் மீது ஒட்டிக்கொண்டு, அதன் வேகத்தில் சென்று கொண்டிருப்பதால், நாம் உணரும் நேரம், எடை, வெளியின் அழுத்தம் ஒரே மாதிரியாக இருக்கிறது. மொத்தத்தில், இவை அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்தது (அதனால் தான் இது சார்பியல் தத்துவம்). வேகம் கூடினால் எதிர்காலதிற்கு செல்லலாம். ஆனால் வேகத்தை குறைத்து கடந்த காலத்திற்கு செல்வது சாத்தியமில்லை.

'கால(ய)மே' இது பொய்யடா... வெறும் காற்றடைத்த பையடா

டைம் மெசின்




டைம் மெசின்




சுமார் 300,000 km/s என்ற வேகத்தில் ஓடக்கூடிய ஒரு பைக் கண்டுபிடிங்க, கைல ஒரு வாட்ச் கட்டிக்கோங்க, ரெண்டு நிமிஷம் பைக் ஓட்டிட்டு வாரேன்னு வீட்ல சொல்லிட்டு பைக்க ஸ்டார்ட் பண்ணி முழு வேகத்தில் (300,000 km/s) வண்டிய ஓட்ட ஆரம்பிச்சு, உங்களோட உள்ளுனர்வு படி ரெண்டு நிமிஷம் மட்டும் வண்டிய ஓட்டுங்க, உங்க கை கடிகாரத்துலயும் சரியாய் நீங்க கெளம்பி ரெண்டு நிமஷம் தான் ஆயிடுக்கும் ஆனா, வண்டிய நிப்பாட்டிட்டு உங்க வீட்டுக்கு வந்து பார்த்தால்.... உங்கள் வீடே அங்கு இருக்காது, நீங்கள் பார்த்த, உங்களுக்கு தெரிந்த மனிதர்கள் அனைவரும் இறந்து 150 வருடங்களுக்கு மேல் ஆகி இருக்கும். அதாவது, நீங்கள் வீட்டில் இருந்து கிளம்பி 200 வருடங்கள் ஆகி இருக்கும், ஆனால் நீங்கள் ஒளியின் வேகத்தில் பயணித்ததால் உங்களுக்கு இரண்டு நிமிடங்கள் தான் ஆகி இருக்கும், பிற்காலதுக்கும் வர இயலாது, ஏனென்றால் நீங்கள் இரண்டு நிமிடம் ஊர் சுற்றி விட்டு வருவதற்குள், பூமி தன்னை தானே 200 முறை சுற்றி விட்டது. (இன்னும் விரிவான விளைவுகள்,, வில் ரைட் லேட்டர் )

#டைம் மெசின் கண்டுபிடிச்சு,, எதிர் காலத்துக்கு போறதெல்லாம் சப்ப மேட்டரு தான ??

தஞ்சை கோயிலின் பேசும் சிற்பம் !!


தஞ்சை கோயிலின் பேசும் சிற்பம் !!


"பேசும் சிற்பம்" என்ற தலைப்பைக் கண்டதும் வியப்படைந்துவிடீர்களா..??

உங்கள் வியப்பு நிச்சயம் குறையாது. இந்த சிற்பம் பேசுவது வாய் மொழியால் அல்ல, உடல் மொழியால்.... வாருங்கள் தஞ்சை கோயிலில் உள்ள தமிழர்களின் சாதனையை காண்போம் !!

படம் 1 :
18 அடி உயரமுடைய ஒரே கல்லில் உருவான துவாரபாலகர், காலை உயர்த்தி நிற்கும் அந்த துவாரபாலகருக்கு நான்கு கரங்கள் உள்ளன. அதை சுற்றி இருக்கும் சிற்ப வேலைபாடுகளை சற்று கூர்ந்து கவனிப்போம், காலின் அடியில் ஒரு சிங்கம், ஒரு பாம்பு, சாதாரணமாக பார்ப்பவர் கண்ணிற்கு இவைகள் மட்டும் தான் புலப்படும்.

படம் 2 :
சாதரணமாக பார்த்தால் தெரியாத அதன் பிரம்மாண்டத்தை, ஒரு யானையுடன் ஒப்பிட்டு பாருங்கள் எப்படி விசுவரூபம் எடுத்து நிற்கிறது, அந்த துவாரபாலகர் சிற்பம் என்பது நன்கு புலப்படும் 




படம் 3 :
சரி துவாரபாலகர், காலின் கீழ் இருக்கும் அந்த பாம்பை சற்று உற்று நோக்குங்கள், பாம்பின் வாயில் என்ன ? ஆஹா ஒரு யானை !! பின்புறமாக யானையை விழுங்கும் பாம்பு, யானை எவ்வளவு பெரியது, அதையே விழுங்கும் பாம்பு என்றால் அது எவ்வளவு பெரியதாக இருக்கவேண்டும் !!!?? அவ்வளவு பெரிய அந்த பாம்பே, அந்த துவரபாலகரின் காலில் ஒரு அரைஞான் கயிறு போல சிறிதாக தொங்கிக்கொண்டு இருக்கிறதென்றால் அந்த துவாரபாலகர் எவ்வளவு பெரிய ஆளாக இருக்க வேண்டும்…?!?!?!?!?!?

இதனால் என்ன தான் கூற வருகிறார்கள் ? இவ்வளவு பெரிய ஆள் நானே வெளியே காவல் தான் காத்துக்கொண்டிருக்கிறேன், உள்ளே இவற்றை எல்லாம் காட்டிலும் பெரியவர் இருக்கிறார், சற்று அமைதியாக செல்லுங்கள் ! என்பதை வாயிலில் நிற்கும் இந்த சிற்பத்தில் எவ்வளவு அழகாக காட்டி இருக்கிறார்கள்.

வாய் பேசாத அந்த சிற்பம், தன் கையால் பேசிக் கொண்டிருப்பதையும் சற்று கவனியுங்கள்…

(இ-1) : இடது புறம் மேலே இருக்கும் கை உள்ளே இருக்கும் கடவுளை நோக்கி காட்டிக்கொண்டு இருக்கின்றது.

(இ-2) : அதற்கு கீழே இருக்கும் கை நின்றுகொண்டிருக்கும் தான் எவ்வளவு பெரியவன் என்பதை அந்த பாம்பை பார்த்து தெரிந்து கொள்ள சொல்கின்றது

(வ-1) : வலது புறம் மேலே இருக்கும் கை உள்ளே இருப்பவர் எப்பேர் பட்டவர் என்பதை கையை மடித்து எவ்வளவு அழகாக பூரிப்புடன் காட்டிக் கொண்டு இருக்கிறது.

(வ-2) : கீழே இருக்கும் கை எச்சரிப்பதை காட்டுகிறது.

நான் சொல்வதை எல்லாம் மறந்து விட்டு இப்போது நீங்களே இந்த நான்கையும் ஒப்பிட்டு சற்று கற்பனை உலகிற்கு செல்லுங்கள், வார்த்தைகள் ஊமையாகி, அந்த சிற்பியை காதலிக்க துவங்கி விடுவீர்கள், தமிழர்களின் ஆற்றலை உணர்வீர்கள்.

இது ஒன்று தானா..?? இல்லவே இல்லை.... இது போன்று எத்தனையோ கோயில்களில், எத்தனையோ சிற்பங்கள் நம்மிடம் பேசிக்கொண்டு தான் இருக்கின்றன, அவைகள் ஒவ்வொன்றும் எதையோ ஒன்றை குறிப்பால் உணர்த்திக்கொண்டு தான் இருக்கின்றன.

இவற்றை எல்லாம் நாம் கவனிக்கிறோமா..?? இல்லை மாறாக அழிக்கிறோம் !!! அடுத்த முறை கோயில்களுக்கு செல்லும் போது, இது போன்ற சிற்பங்களின் மீது விபூதிகொட்டுவது, அதன் மீது சாய்வது, அவற்றின் மீது பெயர்களை பதிப்பது, அதை சேதப் படுத்துவது போன்ற எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம்.!!

அழிவிலிருந்து காப்பாற்றுவோம் நம் கலைப் பொக்கிஷங்களை.!!!

Tuesday, 22 January 2013

அரிசியின் வேறு பெயர்கள்:


அரிசியின் வேறு பெயர்கள்:



ஒரைஸா - இலத்தீன்


அரூஜ்     - அரபி
அரோஜ்  - ஸ்பானிஷ்
ஒரிஜா    - கிரேக்கம்
ரயிஸொ - இத்தாலி
ரிஜ்         - பிரெஞ்சு
ரியிஸ்    - ஜெர்மன்
ரிஸ்        - ரஷ்யா
வ்ரிஹி    - சமற்கிருதம்
வாரி       - மடகஸ்கர்
ப்ரின்ஜ்   - பார்சி
அக்கி      - கன்னடம்
சாவல்      - இந்தி

Thursday, 17 January 2013

மாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி 

ஆசைகள்.......




மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் 

வழியில் நோய்வாய்ப்பட்டார். பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை. சாவு 

தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர்.

ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து, "என்னுடைய சாவு நெருங்கி விட்டது. 

எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன. அவற்றை நீங்கள் 

கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார்.

அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர்.

முதல் விருப்பமாக, "என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் 

மட்டுமே தூக்கி வர வேண்டும்."

இரண்டாவது, 'என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து 

வைத்த, விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்."

மூன்றாவதாக, "என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க 

வேண்டும்."



வீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன. என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள்.

அதில் ஒருவன் தைரியமாக முன்வந்து, "அரசே! நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம். ஆனால், இதற்கான காரணத்தை தாங்கள் விளக்க வேண்டும்" என்று கேட்க, அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார்.

1. என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வார்கள். மருத்துவர்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது. மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது.

2. வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை உன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது. அது சவக்குழி வரை மட்டும்தான்! மனிதர்கள் வீணாக அதன் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக!

3. உலகையே வென்றவன் சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக..

 இனையதளத்தில் உலவிக்கொண்டிருந்தபோது  பட்ட சில வித்தியாசமான படங்கள்... உங்களுக்காக..........



    இது தான் 'சீனாவின் பெருஞ்சுவர்' கிழக்கிலுள்ள போகாய் (Bohai) கடற்கரையோடு                                                   இறுதியாக முடிவுறும் இடம்...




Bracelet pendrive...........

Wrist-mounted finger piano turns any solid surface into piano !!



                 தேடல் தொடரும்...

Tuesday, 15 January 2013

உலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான 

" இசைத் தூண்கள் " !!.





இந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர், இந்த ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டினால் " சப்தஸ்வரங்கலான " " ச,ரி,க,ம,ப,த,நி " என்ற தனித்தனி ராகங்களை அது இசைக்கின்றது ! . சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்தி மூன்று தனித்தனி ராகங்களை இசைக்கின்றது !! .இதில் பெரிய தூணில் கர்நாட சங்கீதமும்., அதை சுற்றியுள்ள சிறிய தூண்களில் " மிருதங்கம்,கடம்,சலங்கை,வீணை,மணி " போன்ற இசைக்கருவிகளின், இசையை தருகின்றது !! அப்படி என்றால் ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால் தான் இப்படி இது வேறு வேறு ஒலிகளில் இசைக்கும் ! இதை தட்டுவதால் நம் விரல்களுக்கு எந்த வலியும் ஏற்படுவதில்லை,உண்மையான இசை ஞானம் உள்ளவர்கள் இதை தட்டினால் இசைக்கருவியில் இருந்து வரும் இசையை விட மிக துல்லியமாக இது இசைக்கின்றது !.சரி இது எதற்காக பயன்பட்டது ? அந்தக்காலத்தில் இருந்த இசைக்கலைஞ்சர்கள் இதை கோயில் விழாக்களின் போது, ஒரு இசைக்கருவியை கூட பயன்படுத்தாமல், இந்த தூண்களை வைத்தே இசைத்துள்ளனர் ! .இது போன்றவை உலகில் எந்த இடத்திலும் இல்லை என்பது நமக்கு இன்னும் சிறப்பை சேர்க்கின்றது !.இந்த இசைத்தூண்களை "மிடறு" என்று அழைத்தார்கள்.

இது எப்படி வேலை செய்கின்றது ? ஒவ்வொரு தூண்களில் இருந்து வரும் சப்தமும், ஒவ்வெரு விதமான " அலைகற்றையை " உருவாக்குகின்றது !.எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் இது எப்படி சாத்தியமானது ? இந்திரா காந்தி அணுஆராய்ச்சி விஞ்ஞானி ( கல்பாக்கம் ) திரு."அனிஷ் குமார் " என்பவரும் அவருடன் பணிபுரியும் சிலரும் இதில் ஒளிந்துள்ள " இயற்பியல்" அதிசயத்தை முதன்முதலாக தூண் வாரியாக ஆராய்ந்தனர், தூண்களின் வடிவமைப்பு மற்றும் இந்த தூண்களில் இருந்து எழும் ஒலியை பதிவுசெய்து அளவிடுவது.

"In situ metallography " (used to find out in-service degradation of critical components of process plants operating under high temperature/ high pressure/ corrosive atmosphere) ( ஒரு பொருளின் நுண்ணிய வடிவமைப்பு மற்றும் நுண்ணிய ஓசையை அளக்கும் முறை ) என்ற புதிய தொழில் நுட்பத்தைக்கொண்டு ஆராய்ந்ததில் இந்த தூண்களானது " தன்மைக்கேற்ப மாறும் ஒரு நிலையான அதிசய திடப்பொருள் " என தெரிய வந்தது !!. " spectral analysis "என்ற ஆராய்ச்சிப்படி இந்த தூண்களில் வரும் இசையானது " தன்மைக்கேற்ப இசைந்து கொடுக்கும் அலைக்கற்றயினால் " சப்தம் உருவாவதாக தெரிவிக்கின்றது !.சப்தம் உருவாவதே ஒரு அதிசயாமான விஷயம் என்பது ஒரு புறம் இருக்க, இது எப்படி ஒரு விரலால் தட்டினாலே இசை எழுகின்றது ? .நினைவில் கொள்ளுங்கள் நாம் சுத்தியலை கொண்டு அடிக்கப்போவதில்லை, இதற்கு தேவை வெறும் ஒரே ஒரு விரல் ! .இசை என்பது காற்றை உள்வாங்கி ஒலியாய் வெளிப்படும் ஒரு முறை, ஆனால் இந்த தூண்களுக்குள் காற்று உள்ளே நுழைந்து இசையை உருவாக்குவதற்கென ஒரு சிறு துவாரதைக்கூட உருவாக்கவில்லை ! 



இதைப்பற்றின ஆராய்ச்சிக்கு இந்த " இசைத்தூண்கள் " ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வெறும் ஆச்சர்யத்தை மட்டுமே பதிலாய் தந்து கொண்டிருக்கின்றது ! அடுத்த ஜென்மம் என்ற ஒன்று இருக்கின்றதா என தெரியவில்லை ! அப்படியே இருந்தாலும் மனிதர்களாக பிறப்போமா என தெரியவில்லை ? அதுவும் குறிப்பாக இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில் பிறப்போமா என்பது தெரியாதது ! ஆகையால் தாமதப்படுத்தாமல் இதுபோன்ற இடங்களுக்கு சென்று நம் முன்னோர் செய்த அதிசயங்களை கண்டு களியுங்கள் , இது போன்ற நம் பெருமைகளை உலகறிய செய்யுங்கள் இப்படிப்பட்டவர்கள் வழியில் வந்த நாம் புதிதாக எதுவும் உருவாகவில்லை என்றாலும் அவர்கள் தந்த மொழியையும், கலாச்சாரத்தயுமாவது கட்டிக்காப்போம்!

தேடல் தொடரும்...                                                          (
நன்றி: வரலாற்று புதையல் )

எது உலக  அதிசயம் 



கருவூர்ச் சித்தரால் வடிவமைக்கப்பட்டு, மன்னன் இராச ராச சோழனால் கட்டப்பட்ட, தமிழனின் கட்டிடக்கலையைப் பறைசாற்றும் கோவிலின் பெருமை!

உலகின் அதிசயம் எனக் கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங்கள் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடத்தை முதலில் கட்டும் போது, இதன் கீழ் உள்ள மண்ணை சோதிக்காமல், ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை விசயங்களை கூட கடைப்பிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும் மோசமாக கட்டினர்.

இதனால் இந்த கட்டிடம் சாயத்தொடங்கியது, இரண்டாம் தளம் கட்டும் போது போர் மூண்டதால் இதன் கட்டுமானம் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள மண் இதற்கு ஒத்துழைத்தது. இதனால் மூன்றாவது தளத்தை அமைக்க முடிந்தது.

ஒரு கேவலமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு கட்டிடம் உலக அதிசயப்படியலில் இன்றும் உள்ளது ! (AUG 8TH 1173 -1372)

தஞ்சையில் உள்ள சித்தர்களின் கட்டிடக்கலைக்கு பெயர் போன ராஜா ராஜா சோழனால் கட்டப்பட 216 அடி உலகையே மிரளச்செய்யும் தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டது. இதன் கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு பாறை 80டன் (80,000 கிலோ) எடை கொண்டது.

உலகையே வியக்க வைக்கும் இந்த 1000 ஆண்டுகளுக்கு மேலாக கம்பீரமாக நிற்கும் கட்டிடம். இப்போதுள்ள எந்தத் தொழில் நுட்பமும் இல்லாத அந்தக் காலத்தில் எப்படி கட்டப்பட்டது? என்பது உலகுக்கே வியப்பாக உள்ளது.

ஆனால். சாகாக்கலை அறிந்த சித்தர்களுக்கு இது மிகச் சாதாரண வேலை. 64 கலைகளையும் தாண்டி, 65வது கலையாகிய சாகாக்கலை/ மரணமில்லா பெருவாழ்வு பெற்ற சித்தர்கள் பிரபஞ்சத்தையே மாற்றி அமைக்கும் சக்தி வாய்ந்தவர்களென சித்தர் ஏடுகள் கூறுகின்றன. இது நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் அவர்கள் விட்டுச்சென்ற பல கலைகள் / தடயங்கள் நம்மை இன்றும் வியக்கவே வைக்கின்றன.

வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ள தஞ்சை பெரிய கோயில் போன்ற கட்டிடம் உலக அதிசய பட்டியலில் இடம் பெறவில்லை! சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ள, தமிழனின் பெருமைகளை பற்றி மறந்து விடுகின்றோம்!


மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில்  தமிழ்.....



உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது. அது மொரீசியசு (Mauritius ) மட்டுமே. 
தமிழ் எண்கள் ௦ 
 0
 ௧- 1
 ௨- 2
 ௩- 3
 ௪- 4
 ௫- 5
 ௬- 6
 ௭- 7
 ௮- 8
 ௯- 9
 மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருப்பதை இப் படத்தில் காணலாம் . எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே. மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர்.

மொரீசியசு மட்டும் அல்ல  சிங்கபூரிலும் 


Monday, 14 January 2013


சித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்..!


மூலிகை மருந்துகள்:


1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத
்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும்.

3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன் படுத்தலாம்.

4. செம்பருத்திபூவைக் காயவைத்து பொடி செய்து தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

5. தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.

6. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

7. ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும். துரித ஸ்கலிதம் ஆகுபவர்களுக்கு இம்மருந்து கை கண்டதாகும்.

8. இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம், அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்
9. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.

10. எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறை
க்கும்.

11. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.

12. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்

நம் நாட்டுக்காக இரண்டு நிமிடங்கள்...!


.......PLEASE SHARE THIS......

சமீப காலமாக விலைவாசி உயர்ந்து விட்டதே என்று அரசைக் குறைக்கூறுவது நாம் செய்யும் தவறு. விலைவாசி உயர்வுக்கு நாம் தான் காரணம். கேட்பதற்கு ஆச்சரியமாக உள்ளதா...?

கீழே படியுங்கள்......

ஒரு வருடத்திற்கு முன் 1 US $ = ரூ 39.
இன்று 1 US $ = ரூ 53.

அமெரிக்க பொருளாதாரம் உயர்கின்றதா...? அதுதான் இல்லை. இந்தியாவின் பொருளாதாரம் வீழ்கிறது...! நாம் குடிக்கும் ஒவ்வொரு குளிர்பானத்தின் தயாரிப்பு செலவு 70-80 பைசா மட்டுமே. 

ஆனால் விற்கப்படும் விலை ரூ 9 -10... அதாவது ஒரு குளிர்பானத்தின் ஒன்பது ருபாய் வெளிநாட்டிற்கு செல்கிறது. இதை தடுக்கவே முடியாதா...? முடியும். நாம் மனசு வைத்தால்...!!!

நாம் என்ன செய்ய வேண்டும்...???

1 ) ஆயிரக்கணக்கான இந்திய நிறுவனங்களின் பொருட்கள், வாங்குவதற்கு ஆள் இல்லாமல் தேங்கிக் கிடக்கின்றன. அவற்றை வாங்குவதற்கு நாம் முன் வரவேண்டும்.

2 ) ஒவ்வொரு இந்தியனும் இதில் கலந்து கொண்டால் தான், நம் இந்தியாவை நாம் காப்பாற்றமுடியும்..

கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் இந்திய பொருள்களை வாங்கவும், வெளி நாட்டு பொருள்களை வாங்குவதை தவிர்க்கவும் முயற்சி செய்வோம்...

LIST OF PRODUCTS:--

COLD DRINKS:-
வாங்கவும்:-
DRINK LEMON JUICE, FRESH FRUIT JUICES, CHILLED LASSI (SWEET OR SOUR), BUTTER MILK, COCONUT WATER, JAL JEERA, ENERJEE,and MASALA MILK...

தவிர்க்கவும்:-
INSTEAD OF COCA COLA, PEPSI, LIMCA, MIRINDA, SPRITE

BATHING SOAP:-
வாங்கவும்:-
USE CINTHOL & OTHER GODREJ BRANDS, SANTOOR, WIPRO SHIKAKAI, MYSORE SANDAL, MARGO, NEEM, EVITA, MEDIMIX, GANGA , NIRMA BATH & CHANDRIKA

தவிர்க்கவும்:-
INSTEAD OF LUX, LIFEBUOY, REXONA, LIRIL, DOVE, PEARS, HAMAM, LESANCY, CAMAY, PALMOLIVE

TOOTH PASTE:-
வாங்கவும்:-
USE NEEM, BABOOL, PROMISE, VICO VAJRADANTI, PRUDENT, DABUR PRODUCTS, MISWAK.

தவிர்க்கவும்:-
INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, CIBACA, FORHANS, MENTADENT.

TOOTH BRUSH:-
வாங்கவும்:-
USE PRUDENT, AJANTA , PROMISE.

தவிர்க்கவும்:-
INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, FORHANS, ORAL-B

SHAVING CREAM:-
வாங்கவும்:-
USE GODREJ, EMAMI.

தவிர்க்கவும்:-
INSTEAD OF PALMOLIVE, OLD SPICE, GILLETE.

BLADE:-
வாங்கவும்:-
USE SUPERMAX, TOPAZ, LAZER, ASHOKA.

தவிர்க்கவும்:-
INSTEAD OF SEVEN-O -CLOCK, 365, GILLETTE.

TALCUM POWDER:-
வாங்கவும்:-
USE SANTOOR, GOKUL, CINTHOL, WIPRO BABY POWDER, BOROPLUS.

தவிர்க்கவும்:-
INSTEAD OF PONDS, OLD SPICE, JOHNSON'S BABY POWDER, SHOWER TO SHOWER.

MILK POWDER:-
வாங்கவும்:-
USE INDIANA, AMUL, AMULYA.

தவிர்க்கவும்:-
INSTEAD OF ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK, MILKMAID.

SHAMPOO:-
வாங்கவும்:-
USE NIRMA, VELVETTE.

தவிர்க்கவும்:-
INSTEAD OF HALO, ALL CLEAR, NYLE, SUNSILK, HEAD AND SHOULDERS, PANTENE.

MOBILE CONNECTIONS:-
வாங்கவும்:-
USE BSNL, AIRTEL.

தவிர்க்கவும்:-
INSTEAD OF VODAFONE.

Food Items:-
வாங்கவும்:-
Eat Tandoori chicken, Vada Pav, Idli, Dosa, Puri, Uppuma.

தவிர்க்கவும்:-
INSTEAD OF KFC, MACDONALD'S, PIZZA HUT, A&W.

BUY INDIAN TO BE INDIAN...

Sunday, 13 January 2013

சிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்!


சிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்!

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள 'அலைல் புரோப்பைல் டை சல்பைடு' என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம்,

* முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான். தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார்.

* வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.

* குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

* சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.

* யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.

* முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.

* செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர, பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.

* சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.

* புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.

* நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

* வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

* வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.

* வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

* அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.